Map Graph

தாமரைக் கோபுரம்

இலங்கையின் கொழும்பில் உள்ள தொலைதொடர்பு கோபுரம் மற்றும் தென் ஆசியாவில் மிக உயரமான கோபுரம்

தாமரைக் கோபுரம் என்பது இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள இதன் தரைத்தள பரப்பளவு 30,600 சதுர அடிகளாகவும், மேலும் 356 மீட்டர் உயரக் கோபுரமாகவும் அமைந்துள்ளது. இது இலங்கையின் அடையாள குறியீடாக பிரதிபலிக்கிறது. இக்கோபுரம் தற்போது தெற்காசியாவில் மிகவும் உயரமான சுயமாகத் தாங்கும் அமைப்பு ஆகும். அத்துடன், ஆசியாவில் 11-வது உயரமான கோபுரமும், உலகின் 19-வது உயரமான கோபுரமும் ஆகும். இக்கோபுரம் முதலில் கொழும்பின் புறநகரான பேலியகொடையில் கட்டப்படுவதாக இருந்தது, ஆனால் பின்னர் இலங்கை அரசு கொழும்பு நகரிற்கு இடத்தை மாற்றியது. தாமரை-வடிவமுள்ள இக்கோபுரம், தொலைத்தொடர்பு, காணகம், மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் கட்டி முடிப்பதற்கான $104.3 மில்லியன் செலவை சீனாவின் எக்சிம் வங்கி கடனாகக் கொடுத்துதவியது. இக்கோபுரத்தை கொழும்பு நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இருந்து காணக்கூடியதாக உள்ளது.

Read article
படிமம்:ColomboSkyline_-_November_2017_(1).jpgபடிமம்:Location_map_of_central_Colombo.png